கன்னியாகுமரியில் போலீஸ் நிலையம் அருகே முதியவர் பிணம்

யார் அவர்? போலீசார் விசாரணைகன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரியில் போலீஸ் நிலையம் அருகே முதியவர் பிணம்
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் சாலையோரமாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.

அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அவர் சுமார் 5 அடி உயரம் இருக்கிறார். கருப்பு நிறம் வேட்டியும் சட்டையும் அணிந்து உள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com