search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் ரூ.7 கோடி செலவில் கூடுதலாக புதிய படகு தளம்
    X

    கன்னியாகுமரியில் ரூ.7 கோடி செலவில் கூடுதலாக புதிய படகு தளம்

    • இட நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை
    • தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிக ளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்தப் படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த படகுகளை நிறுத்துவதற்காக கன்னியாகுமரி வாவதுறை கடற்கரை பகுதியில் படகுத்துறை அமைந்துஉள்ளது.

    இந்த படகு துறையில் ஏற்கனவே விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வரும் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளும் விவேகானந்த கேந்திர பணியாளர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வ தற்காக பயன்படுத்தப்பட்டு வரும் "ஏக்நாத்"என்றபடகும் இந்த படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது.

    இதற்கிடையில் சுற்றுலா த்துறை மூலம்ரூ.8 கோடி செலவில் வாங்கப்பட்ட தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 புதியஅதிநவீன சொகுசு படகுகளும் தற்போது இந்த படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த 2புதிய அதிநவீன சொகுசு படகுகள் வடிவமைப்பில் பெரியதாக உள்ளதால் விவேகானந்தர் நினைவுமண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு ஏதுவானதாக இல்லை.

    இந்த2 புதிய அதிநவீன சொகுசு படகுகளை விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள படகு தளத்தில் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. இதனால் இந்த 2 புதிய படகுகளும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் படகுத்து றையில்உ ள்ள படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது. மேலும் இந்த 2புதிய படகுகளும் தற்போது கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகிக் கொண்டிருக்கிறது.

    அதுமட்டுமின்றி படகுத்து றையில் இந்த2புதிய படகுகளும்நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் மற்ற 3 படகுகளும் இந்த படகுத்துறைக்குள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. இதனால் சில சமங்களில் விபத்துக்கள் நேரிட வாய்ப்புகள் உள்ளது.

    இந்த படகுத் துறையில் ஏற்பட்டுஉள்ள இட நெருக்கடி காரணமாக சில சமயங்களில் ஏற்படும் கடல் சீற்றத்தினால் இந்தப் படகுகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சேதம் அடைந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து இந்த படகு துறையில் ஏற்பட்டுஉள்ள இட நெருக்கடியை சமாளிக்க இந்த படகுத்துறையின்தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் கூடுதலாக ஒரு புதிய படகு தளம் அமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது.

    இந்த புதிய படகு தளம் ரூ.7 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரிக்கும் பணியில் மீன்வளத்துறை பொறியியல் பிரிவைச்சேர்ந்த பொறி யியல் வல்லுனர்கள் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×