search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
    X

    குமரி மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

    • ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள்
    • இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொேரானா பாதிப்பு அதிக மாக இருந்தது.

    கடந்த இரண்டு வாரங் களாக பாதிப்பு குறைந் துள்ளது. இருப்பினும் சுகாதாரத் துறை அதிகா ரிகள் மாவட்டம் முழுவ தும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 625 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதும், முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக ெமகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று குமரி மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 1780 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் வடிவீஸ் வரம் ஆரம்ப சுகாதார நிலையம் தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மேலும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தடுப்பூசி செலுத்தினார்கள்.

    அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், கன்னி யாகுமரி அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, குளச்சல் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதற்கு கூட்டம் குறைவாகவே இருந்ததால் பொதுமக்கள் வந்தவுடன் அவர்களுக்கு மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    காலை 7 மணிக்கு தொடங் கிய மெகா தடுப்பூசி முகாம் மாலை வரை நடக்கிறது. இந்த மெகா தடுப்பூசி முகாமில் மதியம் வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வ மாக வந்திருந்தனர்.

    Next Story
    ×