ஞாறான்விளை அகதிகள் முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம் - போலீசார் விசாரணை

அதிகாலையில் முகாமின் அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தர்மகுணசிங்கம் கயிற்றில் பிணமாக தொங்கினார்தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா எனவும் விசாரணை
ஞாறான்விளை அகதிகள் முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம் - போலீசார் விசாரணை
Published on

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஞாறான்விளை அகதிகள் முகாமில் வசிப்பவர் தர்மகுணசிங்கம் (வயது 59) தொழிலாளி. இவருக்கு மேரி அஜந்தா என்ற மனைவியும் குழந்கதைளும் உண்டு.

இன்று அதிகாலையில் முகாமின் அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தர்மகுணசிங்கம் கயிற்றில் பிணமாக தொங்கியதை பார்த்து அவரது மனைவி மேரி அஜந்தா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் முகாமில் உள்ள உறவி னர்களிடம் போலீசார் தர்மகுணசிங்கம் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அகதிகள் முகாமில் தொழிலாளி தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com