என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கன்னியாகுமரி புதுக்கிராமம் கிறிஸ்தவ ஆலய பங்குத்தந்தை திடீர் மாயம்
  X

  கன்னியாகுமரி புதுக்கிராமம் கிறிஸ்தவ ஆலய பங்குத்தந்தை "திடீர்" மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.

  கன்னியாகுமரி :

  கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் மைக்கேல் நியூமேன் (வயது 34). இவர் கன்னியாகுமரி புதுக்கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதுபற்றி ஆலயத்தின் இணை பங்கு தந்தை அந்தோணி பிச்சை கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×