search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    52-வது வார்டில் திடீர் ஆய்வு குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் - மேயர் மகேஷ் வேண்டுகோள்
    X

    52-வது வார்டில் 'திடீர்' ஆய்வு குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் - மேயர் மகேஷ் வேண்டுகோள்

    • வீடுகளில் இருந்து வாங்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது
    • இனி குப்பைகளை கொட்டி எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் எச்சரித்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியை குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்ற மேயர் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

    வீடுகளில் இருந்து வாங்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட தெங்கம் புதூர் பகுதியில் குப்பை கள் முறையாக கொட்டப்பட வில்லை என்று புகார்கள் வந்தது.

    மேலும் புத்தளம் பேரூ ராட்சியில் உள்ள குப்பை களும் அந்த பகுதியில் கொட்டப்படுவதால் சுகா தார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அந்த பகுதி மக்கள் மேயர் மகேஷிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி 52-வது வார்டுக்குட்பட்ட தெங்கம்புதூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற் கொண்டார். தெங்கம்புதூர் பகுதியில் ஒனாட்சிகிடங்கு பகுதியில் குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படும் இடத்தை மேயர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

    அப்போது அந்த பகுதியில் புத்தளம் பேரூராட்சி சார்பில் குப்பைகள் எரிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து இனி குப்பைகளை கொட்டி எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் எச்சரித்தார்.

    பொதுமக்கள் வழங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அறிய பெருமாள் காலனியில் பல நாட்களாக மூடி கிடக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டார்.

    அப்போது அந்த பகுதி யில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதாகவும் குப்பைகள் முறையாக தரம் பிரிக்காமல் அடிக்கடி எரிப்பதால் ஏற்பட்ட பிரச்சனையில் அந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூடி கிடப்ப தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆய்வு செய்த மேயர் மகேஷ் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி அதை செயல்படுத்தலாமா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் தென்கம்புதூர் சந்திப்பில் உள்ள தனியார் சந்தையை ஆய்வு செய்தார். அப்போது மீன் சந்தை யில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் அந்த பகுதியில் தேங்கி யிருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு செய்த தாகவும் சுகாதார கேடு ஏற்படும் வகையில் தண்ணீர் வெளியேற்ற கூடாது என்றும் வியாபாரிகளிடம் மேயர் மகேஷ் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறு கையில், நாகர்கோவில் மாநகராட்சியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 52 வார்டுகளிலும் ஏற்கனவே ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நாகர்கோவில் மாநகரை குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    தெங்கம்புதூர் பகுதி யில் குப்பைகள் கொட்டு வதில் சில பிரச்சினைகள் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு செய் தோம். பொதுமக்கள் குப்பைகளை இனி தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பைகளை உர மாக்க நடவடிக்கை எடுக்கப்ப டும். குப்பைகளை எக்கார ணத்தைக் கொண்டும் எரிக் கக்கூடாது என்றார்.

    ஆய்வின் போது நகர்நல அதிகாரி ராம்குமார், சுகா தார ஆய்வாளர் ராஜா, கவுன்சிலர் ரமேஷ், மண்டல தலைவர் ஜவகர், ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் வேல் முருகன், பகுதி செயலாளர் ஷேக்மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×