வடசேரியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டம் - 65 பேர் கைது

ஏராளமான நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அரசு ரப்பர் தோட்ட கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை படத்தில் காணலாம்.
அரசு ரப்பர் தோட்ட கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை படத்தில் காணலாம்.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதன் பின்பும் ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.வலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 65 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com