search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் கட்டுரை போட்டி
    X

    கல்லூரி கட்டுரை போட்டியில் பரிசளிப்பு விழா நடைபெற்றபோது எடுத்த படம் 

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் கட்டுரை போட்டி

    • அறிவியல் சங்கம் மற்றும் விஞ்ஞான பாரதி சார்பில் கட்டுரை போட்டி நடந்தது.
    • ‘சுதந்திர போராட்டத்தில் அறிவியல் அறிஞர்க ளின் பங்கு’ மற்றும் ‘சர்.சி.வி.ராமன்’ ஆகிய 2 தலைப்புகளில் நடந்தது.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் அறிவியல் சங்கம் மற்றும் விஞ்ஞான பாரதி சார்பில் கட்டுரை போட்டி நடந்தது. போட்டிகள் 'சுதந்திர போராட்டத்தில் அறிவியல் அறிஞர்க ளின் பங்கு' மற்றும் 'சர்.சி.வி.ராமன்' ஆகிய 2 தலைப்புகளில் நடந்தது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகஅளவில் கலந்து கொண்டு கட்டுரை எழுதினர். இதற்கான பரிசளிப்பு விழாவில் லட்சுமிபுரம் கல்லூரி பேராசிரியர் சுதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    போட்டியில் எந்திரவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி அபிராமி முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இறுதி ஆண்டு மாணவர் கிஷோர் 2-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவி சிவ நிவேதிதா 3-ம் பரிசாக ரூ.1000-மும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களை கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    முதல் பரிசு பெற்ற மாணவி அபிராமி அடுத்த மாதம் (நவம்பர்) 5, 6-ந் தேதிகளில் கல்பாக்கத்தில் அறிவியல் சங்கம் மற்றும் விஞ்ஞான பாரதி சார்பில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×