வடசேரியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடிகடை முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன.
வடசேரி அசம்பு ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது எடுத்த படம்.
வடசேரி அசம்பு ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது எடுத்த படம்.
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகள் எந்தவித பார பட்சமுமின்றி அகற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாக்கமங்கலம் ரோடு, வடசேரி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டது. இன்று வடசேரி அaண்ணா சிலை முதல் புத்தேரி மேம்பாலம் வரை உள்ள அசம்பு ரோட்டில் அனைத்து ஆக்கிர மிப்புகளும் பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது.

கடை முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. மேலும் மழைநீர் வடிகால் மேல் மீது உள்ள ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்த பணியை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com