மண்டைக்காடு அருகே விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை

மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைமுதியவருக்கு கடந்த சில நாட்களாக இடுப்பு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மண்டைக்காடு அருகே  விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை
Published on

கன்னியாகுமரி:

மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் காட்டு விளையை சேர்ந்தவர் சேசையன் (வயது 72). மது அருந்தும் பழக்கமுடைய இவருக்கு கடந்த சில நாட்களாக இடுப்பு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீராததால் அவதிப்பட்டு வந்த சேசையன் சம்பவத்தன்று மாலை விஷ மாத்திரை தின்று வீட்டு மாடிக்கு சென்றார். அங்கு வாந்தி எடுத்த அவரை குடும்பத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேசையன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் ஆல்பர்ட் ராஜுவ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com