என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சுசீந்திரம் அருகே தி.மு.க. பெண் நிர்வாகிக்கு மிரட்டல்
  X

  சுசீந்திரம் அருகே தி.மு.க. பெண் நிர்வாகிக்கு மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாரதிய ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு
  • இந்திய தண்டனை சட்டம் 341, 294 (பி) 506 (1), பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு

  நாகர்கோவில் :

  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. நாகர்கோ வில் அருகே உடையப்பன் குடியிருப்பில் கலைஞர் உரிமை திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் கோலமிட்டார்.

  அப்போது தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஜெனஸ் மைக்கேல் மற்றும் அம்மு ஆன்றோ ஆகியோ ரும் அங்கே வந்தனர். சாலையில் கோல மிட்டதற்கு அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ராஜேஷ் உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்டம் முழுவதும் பெரும் பரப ரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்ட ரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல் தலை மையில் ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் சுசீந்திரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தனர்.

  அந்த புகாரில் கடந்த 15-ந்தேதி தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் தொண் டர்கள் இணைந்து உடையப்பன் குடியிருப்பில் தி.மு.க. தொண்டர் வீட்டின் முன்பு கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

  அப்போது உடையப்பன் குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர், கலைஞர் உரிமைத்தொகை திட்டம் என்று போடப்பட்ட கோலத்தை அழிக்க முயன்றதுடன் எங்களை மிரட்டினார்கள்.

  மேலும் அரசு வழங்கிய நிதி உதவியையும் கொச் சைப்படுத்தி பேசினார் கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

  இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி, உடையப்பன் குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

  இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294 (பி) 506 (1), பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

  Next Story
  ×