மார்த்தாண்டம் அருகே வாழை மரம் வெட்டி சாய்ப்பு

6 பேர் மீது வழக்குப்பதிவுவாழை மரங்கள் வெட்டி சாய்த்ததால் ரூ. 30 ஆயிரம் இழப்பு
மார்த்தாண்டம் அருகே வாழை மரம் வெட்டி சாய்ப்பு
Published on

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி செறுகாட்டு விளையை சேர்ந்தவர் வில்சன் (வயது 58) இவருக்கு சொந்தமான நிலத்தில் 15 -ரப்பர் மரங்களும் 70 - வாழை மரங்களும் நட்டு பராமரித்து வந்துள்ளார் .

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதத்தில் உண்ணாமலைக்கடை பாண்டியன் விளையை சேர்ந்த சீமா (37), திக்குறிச்சியைச் சேர்ந்த பிரவீன் (35) திக்குறிச்சியை சேர்ந்த வசந்தா (25) ஆகியோர் நிலத்தினுள் புகுந்து வாழை மரங்களை வெட்டி சாய்த்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது

வாழை மரங்கள் வெட்டி சாய்த்ததால் ரூ. 30 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com