search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று குப்பை வண்டியில் ஏறி ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்
    X

    நாகர்கோவிலில் இன்று குப்பை வண்டியில் ஏறி ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

    • மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகிறார்கள்
    • குப்பைகள் சரியான முறையில் வாங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி வண்டியின் மேல் ஏறி ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். தினமும் சுகாதார ஆய்வாளர்கள் அந்தந்த பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.சேகரிக்கப்பட்ட குப்பைகளை மாநகராட்சி வண்டியில் ஏற்றினார்கள். இதை ஆணையாளர் ஆனந்த மோகன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரம் பிரித்து வாங்கப்பட்ட குப்பைகள் சரியான முறையில் வாங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி வண்டியின் மேல் ஏறி ஆய்வு செய்தார்.

    Next Story
    ×