search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் போலீசுக்கான கோ-கோ போட்டியில் குளச்சல் சப்-டிவிசன் அணி சாம்பியன்
    X

    பெண் போலீசுக்கான கோ-கோ போட்டியில் குளச்சல் சப்-டிவிசன் அணி சாம்பியன்

    • நாகர்கோவில் சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி
    • 24-ந்தேதி பெண் போலீசாருக்கான வாலிபால் போட்டி, வடம் இழுத்தல் போட்டி, பேட்மிண்டன் போட்டி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீசா ருக்கான பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள் நடை பெற்று வருகிறது.

    நாகர்கோவில் ஆயுதப் படை மைதானத்தில் இன்று காலை போலீசருக்கான கபடி போட்டி நடந்தது.நாகர்கோவில் சப்-டிவிசன் அணியும், கன்னியாகுமரி சப்-டிவிசன் அணியும் மோதியது. இதில் நாகர்கோ வில் சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதேபோல் குளச்சல் சப்-டிவிசன் அணியும், தக்கலை சப்-டிவிசன் அணியும் மோதியதில் தக்கலை சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து இறுதி போட்டியில் தக்கலை சப்-டிவிசன் அணியும், நாகர்கோவில் சப்-டிவிஷன் அணியும் மோதியது. இதில் தக்கலை சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது.

    பெண் போலீசாருக்கான கோ-கோ போட்டி இன்று நடைபெற்றது. நாகர்கோவில்-கன்னியா குமரி சப்-டிவிசன் அணியும், குளச்சல்- தக்கலை சப்-டிவிசன் அணியும் விளை யாடியது. இதில் குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசன் அணியினர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில் குளச்சல் சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    நாளை 24-ந்தேதி பெண் போலீசாருக்கான வாலிபால் போட்டி, வடம் இழுத்தல் போட்டி, பேட்மிண்டன் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    Next Story
    ×