என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திங்கள்நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் 60 பேர் மீது வழக்கு
    X

    திங்கள்நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் 60 பேர் மீது வழக்கு

    • இளைஞர் காங்கிரசை கண்டித்து போராட்டம் நடந்தது
    • சோனியா, ராகுல் காந்தி உருவ படம் எரிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி ராணி உருவ பொம்மையை திங்கள் நகரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் எரித்ததை கண்டித்து திங்கள் நகர் பஸ் நிலையம் முன்பு குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சி.பி.ராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் மனோர குமார், கோபுஜி, செந்தில், கவுன்சிலர்கள் ஜெய சேகரன், முத்துக்குமார், கவுதமி, சுஜாதா உட்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் ஸ்ரீகலா முருகன், விஜயலட்சுமி பாலசுப்ர மணியன், குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் அனுஷா தேவி, மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தின மணி, மற்றும் மாவட்ட, ஒன்றிய பஞ்சாயத்து பாரதிய ஜனதா பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது சோனியா, ராகுல் காந்தி உருவ படம் எரிக்க பட்டது. இதுகுறித்து இரணியல் போலீசார் ஒன்றிய தலைவர் சி.பி.ராஜ் மற்றும் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×