அக்னிபத் திட்ட ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் அசல் கல்விச்சான்று கொண்டு வர வேண்டும்

விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
அக்னிபத் திட்ட ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் அசல் கல்விச்சான்று கொண்டு வர வேண்டும்
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் (அக்னிபத்) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்கள் தேர்விற்கு வரும்போது அசல் கல்விச்சான்று (8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு) மற்றும் அதன் நகல், கடந்த ஜூலை மாதத் தில் www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளபடி குறிப்பிட்ட படிவத்தில் தயார் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரம் (அபிடவிட்) மற்றும் இதர ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.

மேலும் இது தொடர்பான முழு விவரங்களையும் www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com