search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு அருவியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
    X

    சபரிமலை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று காலை குவிந்திருந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகளை படத்தில் காணலாம்

    திற்பரப்பு அருவியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்

    • சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு
    • 17 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழி கிறது.

    இதையடுத்து பேச்சிப்பா றை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கோதை ஆறு, வள்ளியாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கின் காரணமாக திற்ப ரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது.

    தற்போது மழை சற்று குறைந்ததையடுத்து அணை களுக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரும் நிறுத்தப்பட்டுள் ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் குறைந்ததையடுத்து திற்ப ரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவி யில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 17 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலை மோதி வருகிறது.

    தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாப் பயணி கள் சபரிமலையில் தரிச னம் செய்துவிட்டு கன்னியா குமரிக்கு வருகை தர தொடங்கியுள்ளார்கள். கன்னியாகுமரிக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் திற்பரப்பு அருவிக்கு செல்கிறார்கள். அங்கு செல்லும் அய்பப்ப பக்தர் கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.இதனால் திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    விடுமுறை தினமான இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், குளச்சல் பீச் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் காலை மாலை நேரங்களில் சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×