ராஜாக்கமங்கலம் அருகே மது குடிக்க பணம் கேட்டு மீனவர் மீது தாக்குதல்

பொருள்கள் வாங்கிவிட்டு பஸ்சிற்காக ராஜாக்க மங்கலம் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம் அருகே மது குடிக்க பணம் கேட்டு மீனவர் மீது தாக்குதல்
Published on

ராஜாக்கமங்கலம் :

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறை சவேரியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஜோன் ஆப் ஆர்க் (வயது 60). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை ராஜாக்கமங்கலத்திற்கு பொருள்கள் வாங்கு வதற்கு இவர் சென்றார். பொருள்கள் வாங்கிவிட்டு பஸ்சிற்காக ராஜாக்க மங்கலம் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சீமோன் என்ற கமலேஷ் (40) அங்கு வந்துள்ளார். அவர், ஜோன் ஆப் ஆர்க்கிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் கம்பியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஜோன் ஆர்க் ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com