கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மலர் முழுக்கு விழா

23-ந்தேதி காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடக்கிறதுபகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மலர் முழுக்கு விழா
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடிகிருத்திகை விழா சிறப்பாக கொண்டா டப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது.இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும் 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

அதன்பின்னர் 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது. அதன் பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து உள்ளிட்ட பல வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெறுகிறது. பின்னர் அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com