களியக்காவிளை அருகே மாடியில் இருந்து செல்போன் பேசிய தொழிலாளி தவறி விழுந்து சாவு

அனுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.திர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
களியக்காவிளை அருகே மாடியில் இருந்து செல்போன் பேசிய தொழிலாளி தவறி விழுந்து சாவு
Published on

கன்னியாகுமரி :

கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகன் அனு.

இவர் கழுவன்திட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சலூண் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அனுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற அனு, செல்போன் பேசுவதற்காக கடையின் மேல் மாடிக்குச் சென்றுள்ளார். அங்கு மாடி சுவரில் இருந்து செல்போன் பேசும் போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் அனுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அனு இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பேசிய வாலிபர் கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com