குளச்சல் அருகே சொத்தை எழுதி கேட்டு பெண்ணுக்கு அடி உதை

சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் மகன் தகராறுபோலீசார் மகனை அழைத்து அறிவுரை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

குளச்சலை அடுத்த மேற்கு நெய்யூர் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 67). இவரது மனைவி சுசீலா (65). இந்த தம்பதியின் மகன் பிரபாகரன் (42).

இவர் சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து பழனி குளச்சல் போலீசில் பலமுறை புகார் செய்துள்ளார். போலீசார் பிரபாகரனை அழைத்து அறிவுரை கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பிரபாகரன் வீட்டில் தகராறு செய்து தனது தாயார் சுசீலாவை கட்டையால் தாக்கி உள்ளார்.

இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் பிரபாகரன், அவரது மனைவி வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com