என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதி நிற்கும் கனரக வாகனம்
குலசேகரம் அருகே அதிவேகமாக வந்த கனரக வாகனம் மோதி வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்தது
- இன்று காலையில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே புலியிறங்கி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று எம்.சான்ட் ஏற்றிக்கொண்டு அதிவேக மாக நாகர்கோவிலில் இருந்து குலசேகரம் வழியாக மார்த்தாண்டம் நோக்கி செல்லும்போது புலியிறங்கி பகுதியில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது. எப்போதும் பரபரப்பாக மக்கள் சென்றுகொண்டு இருப்பார்கள். இன்று காலை யில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்தான் இந்த பகுதியில் சொகுசு கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
Next Story