என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே ஆசிரமத்தில் தங்கி இருந்தவர் திடீர் சாவு
- ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இருந்த சன்சாய் என்பவரை ஒப்படைத்தனர்.
- சன்சாய் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி :
சுசீந்திரம் அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தையில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 9-ந் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இருந்த சன்சாய் (வயது 36) என்பவரை ஒப்படைத்தனர்.
நேற்று முன்தினம் சன்சாய் உணவு அருந்தாமல் சோர்வாய் இருந்தவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சன்சாய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பேரில் ஆசிரம நிர்வாகி இக்னேசியஸ் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சன்சாய் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.






