search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பெருஞ்சாணியில் 5.2 மி.மீ. மழை
    X

    கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பெருஞ்சாணியில் 5.2 மி.மீ. மழை

    • இருச்சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாத அளவிற்கு தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.85 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மதியம் நேரங்களில் சாலைகளில் கானல் நீர் கண்ணுக்கு தெரியும் அளவில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாத அளவிற்கு தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    நாகர்கோவில் நகரில் மதியம் நேரங்களில் வெயில் கொளுத்துகிறது. பொது மக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்கம் ஒருபுறம் இருக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக மாலை நேரங்களில் மட்டுமே சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல முடியும் அளவிற்கு உள்ளது. கன்னியாகுமரி சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச் பகுதிகளில் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகளவு குவிந்த வண்ணம் உள்ளனர்.

    கோடை மழையும் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. அணை பகுதிகளில் 2 நாட்களாக சாரல் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சுருளோடு, கன்னிமார் பகுதிகளில் மழை பெய்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 5.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.58 அடியாக உள்ளது. அணைக்கு 145 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.85 அடியாக உள்ளது. அணைக்கு 34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 0.30 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஏற்கனவே வாரத்திற்கு ஒரு முறை பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்பொழுது முக்கடல் அணையில் தண்ணீர் நீர்மட்டம் சரிந்துள்ள நிலை யில் பேச்சிப்பாறை அணை யில் இருந்து குடிநீருக்காக வருகிற 25-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தர விட்டுள்ளது. அதை தொடர்ந்து பொதுமக்க ளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×