களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 11 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை

இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துவாகனங்களில் கனிம வளங்கள் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது
களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 11 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்க ளில் இருந்தும் 100-க்கணக் கான லாரிகள் கனிம வளங்களை அதிக அளவில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார், பி.பி .எம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்தவழியாக வந்த 8 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வாகனங்களில் கனிம வளங்கள் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. அதன் உரிமையாளர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று மார்த்தாண்டம் வழியாக 3 பெரிய லாரி களில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அனுமதி கடிதம் மற்றும் அதிக பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com