search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகஸ்தீஸ்வரம் வட்டாரத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்த பயிற்சி முகாம்
    X

    அகஸ்தீஸ்வரம் வட்டாரத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்த பயிற்சி முகாம் நடந்த போது எடுத்த படம்.

    அகஸ்தீஸ்வரம் வட்டாரத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' குறித்த பயிற்சி முகாம்

    • 215 கடைகளை சேர்ந்த 120 விற்பனையாளர்கள் பங்கேற்பு
    • குமரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் விமலாராணி பயிற்சி அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட த்து க்குஉட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் பணிபுரிந்து வரும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு பொது விநியோக அமைப்பின்ஒருங்கிணைந்த மேலாண்மை தொடர் பான பயிற்சி நடத்த வே ண்டும்என்ற சென்னை உணவுப்பொருள்வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையாளரின்அறிவுரை ப்படி அகஸ்தீஸ்வரம் வட்டாரத்துக்கு உட்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கான பயிற்சிமுகாம்நடந்தது.

    குமரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் விமலாராணி பயிற்சி அளித்தார். ஒரே நாடுஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியுடைய பிற மாநிலங்களில்இருந்து குமரி மாவட்டத்துக்கு புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு "இன்டர்ஸ்டேட்"முறையில் பயோமெட்ரிக் மூலம் அவர்களுக்குரிய அரிசி மற்றும் கோதுமை உணவு தானியங்கள் நியாயவிலைக்கடைகளில் மின்னணு விற்பனை முனைய சாதனம் மூலம் விற்பனை செய்வது குறித்துபயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் குடிபெ யர்ந்த நபர்களுக்கும் பயோமெட்ரிக் மூலம் "இன்டர்ஸ்டேட்"முறையில் அவர்களுடையஉணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் மின்னணு விற்பனை முனைய சாதனம் மூலம் விற்பனை செய்வது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சிமுகாமில் அகஸ்தீஸ்வரம்வட்டா ரத்துக்கு உட்பட்ட 215 ரேஷன் கடைகளில் பணிபுரிந்து வரும் 120-க்கும்மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    இந்தபயிற்சியில் நாகர்கோவில் பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் குருசாமி மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் அனில்குமார் மற்றும் மாவட்ட வழங்கல் நுக ர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவாழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×