இன்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலைஅ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்பு
எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
Published on

நாகர்கோவில்:

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதையடுத்து கன்னியா குமரி மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங் கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் பச்சைமால், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜே.கே. திலக், தொழிற் சங்க செயலாளர் சுகுமா ரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதி யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாநகர செயலாளர் சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர் அக் ஷயாகண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாகதேவன், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, முருகேஸ்வரன், ஜெயகோபால், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ெரயிலடி மாதவன், சகாயராஜ், ரபீக், வெங்கடேஷ், ராஜாராம், கோட்டார் கிருஷ்ணன், கே.சி.யூ.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர். படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தி னார்கள். கிழக்கு மாவட்டத் திற்குட்பட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com