search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் கோவிலில் திருட்டு
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் (கோப்பு படம்)

    திருவட்டார் கோவிலில் திருட்டு

    • கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
    • 2 கைரேகைகள் சிக்கியது

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அருகில் நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் நேற்று முன்தினம் கோவிலை திறக்க அர்ச்சகர் வந்தார்.அப்போது அங்கிருந்த இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப் பட்டு இருந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உபகரணங்களையும் மர்மநபர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். இதுகுறித்து கோவில் மேலாளர் ஜோதிஷு திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் சப் இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் ஆகியோர் கோவிலுக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    அப்போது இரண்டு கொள்ளையர்களின் கை ரேகைகள் சிக்கியது. அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    திருவட்டார் பஸ் நிலையம் அருகே ஜவுளி கடை மற்றும் பாத்திரக் கடையிலும் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. ஜவுளிக்கடையில் இருந்து ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.பாத்திரக்கடையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது.

    இந்த கொள்ளை சம்ப வத்திலும் ஒரே கொள்ளை யர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கி றார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×