search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தம்மத்துகோணம்-ராஜாக்கமங்கலம் சாலை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்த கோட்ட பொறியாளர்
    X

    சாலை சீரமைப்பு பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 

    தம்மத்துகோணம்-ராஜாக்கமங்கலம் சாலை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்த கோட்ட பொறியாளர்

    • ரூ.‌1 கோடியே 5 லட்சத்திற்கு 3½ கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
    • கடந்த 3 நாட்களாக நடை பெற்று வரும் இந்த பணிகள் நாளை (திங்கட்கிழமை) நிறைவடையும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே தம்பத்து கோணம் கம்பி பாலத்தில் இருந்து ராஜாக்க மங்கலம் வரை உள்ள 3½ கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர்.

    இதையடுத்து அதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட் டது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியைச் சேர்ந்த ஆர். பி.ஆர். நிறுவனத்தினர் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு சாலை சீரமைப்பதற்கான டெண்டரை எடுத்தனர்.இதை தொடர்ந்து சாலை பணிகள் மேற்கொள்ளப் பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னி லையில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்தது.

    சாலை சீரமைப்பு பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெண்டரில் குறிப்பிட்டவாறு சாலை சீரைமக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து நெடுஞ் சாலை துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கூறு கையில், சாலை சீரமைப்ப தற்கான டெண்டர் போடப்பட்டது. தற்போது சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை சீரமைக்கும்பணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த பணியை நானும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். டெண்ட ரில் குறிப்பிட்டவாறு தரமாக அந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பில் எந்த குறைபாடும் கிடையாது. கடந்த 3 நாட்களாக நடை பெற்று வரும் இந்த பணிகள் நாளை (திங்கட்கிழமை) நிறைவடையும் என்றார்.

    Next Story
    ×