search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
    X

    கபடி போட்டியை துணை மேயர் மேரி பிரின்சி லதா தொடங்கி வைத்தார்.

    நாகரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

    • கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் இன்று தொடங்கியது
    • 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவி களுக்கான போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று 6-ந்தேதி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் தொடங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று போட்டியில் பங்கேற்றனர். கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி, ஆக்கி போட்டி, வாலிபால் போட்டி, டேபிள் டென்னிஸ் போட்டி, கால்பந்து போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் கபடி போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா தொடங்கி வைத்தார். மாவட்ட விளை யாட்டு அதிகாரி ராஜேஷ் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கான போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி வரை விளையாட்டுப்போட்டிகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    Next Story
    ×