தக்கலை அருகே போதகரை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

பாஜக பெண் கவுண்சிலர் உள்பட 3 பேருக்கு போலீசார் வலை வீச்சுபோலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராஜன் 
ராஜன் 
Published on

கன்னியாகுமரி:

தக்கலை அருகே மேக்காமண்டபம் காஞ்சிரத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்பர்ஜன் (வயது 42).இவர் காஞ்சிரத்துகோணம் பகுதியில் கிளிஸ்தவ சபை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி தக்கலை அருகே பத்மனாபபுரம் அரண்மனை அருகில் தனது காரில் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது பாஜக கவுன்சிலர் ஷீபா மற்றும் கணவர் நாகராஜன், பத்மனாபபுரம் பகுதியை சேர்ந்த வவ்வால் என்ற ராஜன் மற்றும் சாரோடு பகுதியை சேர்ந்த வின்சென்ட் சர்சில் ஆகி யோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி ஸ்பர்ஜனை தாக்கி காரையும் உடைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த ஸ்பர்ஜன் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இதுப்பற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் 4 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் பத்மனாபபுரம் பகுதியில் வைத்து ராஜனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com