கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா

திரளான பக்தர்கள் பங்கேற்புஅம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி விழா கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல மார்கழி மாதத்துக்கான பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

பின்னர் காலை ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்து டன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. மாலை சாயராட்சை தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, துளசி, தாமரை உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது.

இரவு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்த நிகழ்ச்சி நடந் தது. அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அம ரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சி யும் அதைத்தொ டர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வா கத்தினர் செய்திரு ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com