நாகர்கோவில் அருகே ரெயில் முன் பாய்ந்து கார் டிரைவர் தற்கொலை

நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

வள்ளியூர்-நாங்குநேரி இடையே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தை சேர்ந்தவர் சுதர்வேல் (வயது 37) கார் டிரைவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுதர்வேல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுதர்வேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்டவாளத்தில் பிண மாக கிடந்த சுதர்வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com