மார்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற 2 கனரக லாரிகள் பறிமுதல்

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டும்
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறை களை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.

இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலை களில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடி யாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறை கள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்லப்பட்ட 2 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படு கிறது.

இதன் உரிமையாளர் யார்? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com