search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் கலெக்டர் மலர் அஞ்சலி
    X

    மாவட்ட கலெக்டர் அரவிந்த் பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தியதை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் கலெக்டர் மலர் அஞ்சலி

    • மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி மரியாதை
    • பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தினர்

    கன்னியாகுமரி:

    மகாத்மா காந்தியின் 76-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    இதையொட்டி கன்னியா குமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) முன்பு காந்தி யின் உருவப் படம் பொதுமக்கள் அஞ்சலிக்காக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.அவரதுஉருவப்படத்துக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர் கோவில் ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் செயல் அலுவலர் ஜீவ நாதன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ்மைக்கேல், சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஷ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்ஆனி ரோஸ்தாமஸ், சகாய ஜூடு அல்பினோ ஆனந்த், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காந்தி நினைவுநாளை யொட்டி சர்வோதய சங்கத் தைச் சேர்ந்த பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தி னார்கள். இந்த நூற்பு வேள்வி கன்னியாகுமரி கடலில் காந்தியின்அஸ்தி கரைத்த நினைவுநாளான பிப்ரவரி மாதம் 12-ந் தேதி வரை 14 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    Next Story
    ×