கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரி மனு

உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.ஹரிபத்மன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரி மனு
Published on

சென்னை:

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ஹரிபத்மன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது பழைய மாணவிகளும், தற்போது படிக்கும் மாணவிகளும் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர் மாணவிகளை தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com