என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
- விழாவில் நந்தீஸ்வரருக்கு மஞ்சள் அபிஷேகம், சந்தண அபிஷேகம், மூலிகை அபிஷேகம் உள்பட பலவகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
- தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கடையம்:
கடையம் வில்வவனநாதர்- நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விழாவில் நந்தீஸ்வரருக்கு மஞ்சள் அபிஷேகம், சந்தண அபிஷேகம், மூலிகை அபிஷேகம், விபூதி அபிஷேகம், தயிர் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பலவகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.இதைத் தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story






