காங்கயம் நகர அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

காங்கயம் நகர அ.தி.மு..க. முன்னாள் பொருளாளர் கந்தசாமி வரவேற்று பேசினார்.விழாவில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கயம் நகர அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
Published on

காங்கயம் :

காங்கயம் நகர அ.தி.மு.க., சார்பில் காங்கயம் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கயம் அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், குண்டடம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கயம் நகர அ.தி.மு..க. முன்னாள் பொருளாளர் கந்தசாமி வரவேற்று பேசினார்.

விழாவில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com