பாபநாசத்தில் ஜமாபந்தி; பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் தகவல்

பொதுமக்கள் வழங்கிய 213 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.2 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும் கலெக்டர் வழங்கினார்.
ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாள் கபிஸ்தலம் சரகத்திற்கு ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

இந்த ஜமாபந்தியில் 25 கிராமங்களுக்கு நடந்தது. ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய 213 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் 2 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும் வழங்கினார்.

இதில் பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணு பிரியா, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முருககுமார், திருவையாறு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் நெடுஞ்செழியன், தஞ்சை கலெக்டர் அலுவலக மேலாளர் ரத்தினவேல் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com