search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எம்.எல்.ஏ.க்களிடம் மனு
    X

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எம்.எல்.ஏ.க்களிடம் மனு

    • தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • கோரிக்கையை வலியுறுத்தி வரும், 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

    ஈரோடு:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 7- வது ஊதியக்குழு, 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாநில கூட்டமைப்பு சார்பில், 3 கட்ட போராட்டங்கள் நடத்த அறிவித்துள்ளனர்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும், 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். அதே நேரம், தங்களது கோரிக்கை யை மனுவாக தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களிடமும் வழங்க திட்டமிட்டனர்.

    இதன்படி ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், விஜயமனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், பவானி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி சாகர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பண்ணாரி ஆகியோரிடம் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனு வழங்கினர்.

    Next Story
    ×