என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்பானைகள்  தயாரிப்பு பணிகள் தீவிரம்
    X

    மண்பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்

    • பொதுமக்கள் மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கையை வழிபடுகின்றனர்.
    • நன்கு உலர வைக்கப்படும் பானைகளில் வர்ணம் பூசி வெயிலில் காய வைத்து விற்பனை செய்யப்படுகிறது

    உடுமலை :

    தமிழகத்தில் வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையில் மண்பானை, கரும்பு முக்கிய இடத்தை பெறும். அன்றைய தினம் பொதுமக்கள் மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கையை வழிபடுகின்றனர். கிராமப்புறங்களில் ஆரம்பம் தொட்டு இன்று வரை பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மண்பாண்ட தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்து வருகின்றனர். உடுமலையில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் உள்ள நிலையில் பொங்கலுக்கான பானை தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

    மண் கட்டிகளை உடைத்து தூளாக்கி பசை போன்று பதத்திற்கு வரும் வரை ஒரு நாள் பதப்படுத்தப்படும். பின் கைகளால் நன்கு அடித்து மண் கலவை உருவாக்கப்படும்.இதையடுத்து சுழலும் சக்கரத்தைக் கொண்டும், கையாலும் பொங்கல் பானை, தீச்சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நன்கு உலர வைக்கப்படும் பானைகளில் வர்ணம் பூசி வெயிலில் காய வைத்து விற்பனை செய்யப்படுகிறது

    Next Story
    ×