search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேல்மலையனூர் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
    X

    மேல்மலையனூரில் உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை கொட்டி அழித்தனர்.

    மேல்மலையனூர் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

    • பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
    • 5 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி பெரு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வருவார்கள். இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், இளங்கோவன், கொளஞ்சி, அன்பு பழனி, ஸ்டாலின் ராஜரத்தினம், மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மேல்மலையனூர் பகுதியில் உள்ள 55 கடை களில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, லேபிள் விதிமீறல் காரணங்களுக்காக 5 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆய்வில் 90 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், 50 கிலோ அயோடின் சேர்க்கப்படாத உப்பு, 21 கிலோ சாப்பிடக் கூடாத பேரிச்சம்பழம், 1 கிலோ கலப்பட டீ தூள், 3 கிலோ அதிக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள், ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் தற்காலிக விழாக்காலக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்த ப்பட்டது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலக மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×