search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் - திண்டுக்கல் ஐ. லியோனி பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் பலர் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் - திண்டுக்கல் ஐ. லியோனி பேச்சு

    • பல்வேறு சோதனைகளை கடந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்து வருகிறார்.
    • செப்டம்பர் 15-ந்தேதி முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் டூவிபுரத்தில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநில பேச்சாளர் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    பல்வேறு சாதனை

    1996- 2001 திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டுவந்த கணினி கல்வி மூலம் படித்து சாதனை படைத்த தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். ஆட்சிக்கு ஆளுநரால் இடையூறு, ஒன்றிய அரசு பாராமுகம் என்று பல்வேறு சோதனைகளை கடந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்து வருகிறார். செப்டம்பர் 15-ந்தேதி முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என பேசினார்.

    நிகழச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், கவுன்சிலர்கள் பவானி மார்ஷல், சரவணக்குமார், வைதேகி, விஜயகுமார், தெய்வேந்திரன், அந்தோணிபிரகாஷ் மார்ஷல், சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், செந்தில்குமார், நாராயணன், அனல்மின்நிலைய கூட்டுறவு சங்க தலைவர் துரை, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக்அப்தனபால், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, செல்வராஜ், பாலகுருசாமி, சிங்கராஜ், கீதா செல்வமாரியப்பன், அனல்சக்திவேல் மற்றும் கருணாமணி, பெனில்டஸ், மகேஸ்வரசிங், பெல்லா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அடுத்த பிரதமர்

    தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோணி தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. அப்போது லியோனி பேசுகையில் பேசியதாவது:-

    பிரதமரால் மணிப்பூரில் 50 நாட்களுக்கு மேலாக நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாடுகளுக்கு சென்று உலா வருகிறார். தமிழகத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த இந்தியாவின் பிரதமர் தமிழகத்தில் இருந்து வருவார் என்று பேசியுள்ளார். மோடி மீது அவருக்கே நம்பிக்கை இல்லை. நம்முடைய தலைவர் அடையாளம் காட்டுபவர் தான் பிரதமர் என்ற நிலை உருவாகியுள்ளது.

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்திற்கு பின்னர் ஆளும் கட்சியினர் பதட்டத்தில் உள்ளனர். காரணம் தமிழக முதல்-அமைச்சர் திட்டங்கள், கொள்கைகள் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்பட்டது. இதன் எதிரொலி தான் ஆளும் கட்சியினருக்கு அரை கூவலாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×