என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டி யனை தாக்கிய வர்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகிரி பேருந்து நிலையம் காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர துணைத்தலைவர் குருவு, மாவட்டக்குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விவசாய தொழிலாளர் வட்ட தலைவர் வேல்சாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளனும், மாவட்ட துணைச் செயலாளர் சண்முக வடிவு மற்றும் வார்டு செயலாளர்கள் கோவிந்தன், கிருஷ்ணன், மாரியப்பன், ஏ.ஐ.ஒய்.எப். நகர செயலாளர் பால்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×