மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Published on

சேலம்:

கர்நாடக, தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று மாலை வினாடிக்கு 8 ஆயிரத்து 268 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 12 ஆயிரத்து 713 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் தற்போது 55.67 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com