கடத்தூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை அதிகரிப்பு

கடத்தூரில் வெற்றிலை மார்க்கெட் வாரந்தோறும் கூடும்.வெற்றிலை விலை மிகவும் உயர்ந்துள்ளதாக வியாபா ரிகள் தெரிவித்தனர்.
கடத்தூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை அதிகரிப்பு
Published on

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் வெற்றிலை மார்க்கெட் வாரந்தோறும் கூடும்.

இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வெற்றி லையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் வெற்றிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு வெற்றிலை வரத்து குறைந்து வருகிறது.

இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.22 ஆயிரம் வரை விற்பனையானது.

இந்த வாரம் வெற்றிலை விலை மேலும் அதிகரித்தது. ஒரு மூட்டை வெற்றிலை குறைந்த பட்சமாக ரூ.22 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.

வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் தேவை அதிகரித்து வெற்றிலை விலை மிகவும் உயர்ந்துள்ளதாக வியாபா ரிகள் தெரிவித்தனர்.

சமீப காலத்தில் இவ்வளவு கூடுதலான விலை கிடைக்காத நிலையில் இந்த விலை உயர்வு வெற்றிலை விவசாயிகளை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com