search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு
    X

    செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

    செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு

    • நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விற்பனைக்கு வரும் நெல் மூட்டைகள் தரமானதாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் இங்கு கொள்முதல் செய்யப்படும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கட்டிடமில்லாமல் திறந்த வெளியிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 வருடம் முன்பு புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் சுமார் 10,000 நெல் மூட்டைகள் மட்டுமே வைக்க கூடிய நிலை உள்ளது. அதிகமாக வரும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில்தான் வைக்க வேண்டும். அப்போது மழை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தற்போது சீசன் என்பதால் நெல் மூட்டைகள் வரத்து அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் 500 லாட் நெல் மூட்டைகளாக 14, 1474 நெல் மூட்டைகளும் நேற்று 700 லாட்டுகளாக சுமார் 16,000 நெல் மூட்டைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஞ்சி கமிட்டியில் எடைப்பணி தொழிலாளர்கள் சாக்கு மற்றும் தொழிலாளர்கள் லாரி மூட்டை ஏற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் வரும்போது கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

    எனவே நெல் மூட்டைகள் நேற்று முன்தினமும் நேற்றும் கொள்முதல் செய்யப்பட்டன. அவைகள் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டனர். நேற்று வந்த நெல் மூட்டைகள் நேற்று மாலை மற்றும் இன்று கொள்முதல் செய்யப்படுகிறது. அவை சுமார் 3 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்படும்.

    இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே வேலை நாளாக இருப்பதாலும் மற்ற நான்கு நாட்கள் விடுமுறையா இருப்பதாலும் விவசாயிகள் இனி நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் திங்கட்கிழமை நடைபெறும் கொள்முதலுக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்தால் போதும் என்று கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கமிட்டியின் வெளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தை மாதமும் சீசன் டைம் என்பதால் சுமார் 15 நாட்களுக்கு இவ்வாறு அதிக அளவில் நெல்மூட்டைகள் வரும் என்றும், மற்ற நாட்களில் சாதாரணமாக இருக்கும் என்றும் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×