search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைக்கால நோய்கள் அதிகரிப்பு : போடி அரசு ஆஸ்பத்திரியில் நிரம்பி வழியும் நோயாளிகள்
    X

    போடி அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்.

    மழைக்கால நோய்கள் அதிகரிப்பு : போடி அரசு ஆஸ்பத்திரியில் நிரம்பி வழியும் நோயாளிகள்

    • போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
    • போடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.

    போடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக எல்லை பகுதிகளான பூப்பாறை, ராஜாக்காடு, நெடுங் கண்டம், கட்ட ப்பனை போன்ற பகுதிகளிலி ருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    தற்போது போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் ஆயிரக்கணக்கானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    போடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் போடி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி யாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பதிவு சீட்டு வாங்கும் இடத்திலும் சிகிச்சை பெறுவதிலும் ஊசி போடும் இடத்திலும் மாத்திரை பெறும் இடத்திலும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×