தச்சநல்லூரில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு- நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

நல்மேய்ப்பர் நகர் தெருக்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.சமீபத்தில் டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களை நாய்கள் கடித்து குதறியது.
நல்மேய்ப்பர் நகரில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்.
நல்மேய்ப்பர் நகரில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகர் 11, 12, 13 மற்றும் 14-வது தெருக்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அங்கு 15-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பாகவும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுவர்-சிறுமிகள் தெருக்களில் சென்று விளையாட அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீபத்தில் டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களை நாய்கள் கடித்து குதறியது. ஆபத்தான நிலையில் அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் நல்மேய்ப்பர் நகரில் நடப்பதற்கு முன்பாக மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடிக்க வேண்டும் என்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com