search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

    • இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
    • அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பூதேவி,சமேத ஸ்ரீ அலமேலு உடனுறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சாமி கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.


    காட்டூர் பாண்டுரங்கர் கோவில்

    அதன் பின்னர் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு, அதன் வழியாக சுவாமி பல்லக்கில் எடுத்துவரப்பட்டார். அப்பொழுது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அதிகாலை முதலே பெரு மாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

    குமாரபாளையம்

    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதி காலையில் குமாரபா ளையத்தில் உள்ள பெரு மாள் கோவில்களில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், காட்டூர் பாண்டுரங்கர் கோவில், கோட்டை மேடு பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பரமபத வாசல் வழியே சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்க ளுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராசிபுரம்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பொன் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் முத்தங்கி கவச அலங்காரத்தில் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டபடி, பெருமாளை வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். பொன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஜனகல்யாண் இயக்கம் சார்பில் அதன் தலைவர் பரந்தாமன், செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

    Next Story
    ×